தாயகச் செய்தி 

பிரதேச வைத்திய சாலைக்கு சென்ற குறைபாடுகள் குறித்து ஆராய்வு.ரவிகரன் எம்.பி;

முல்லைத்தீவு பிரதேச வைத்திய சாலைக்கு நேரடியாகச் சென்ற ரவிகரன் எம்.பி; குறைபாடுகள் குறித்து ஆராய்வு.

முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு 12.03.2026இன்று நேரடியாகச் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வைத்திய சாலையில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.

குறிப்பாக நோயாளர்கள் மற்றும் வைத்தியர் உள்ளிட்ட தரப்பினர்களுடன் கலந்துரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வைத்தியசாலைக்குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார். அத்தோடு வைத்திய சாலையில் காணப்படும் குறைபாடுகளை நேரடியாகப் பார்வையிட்டார்.

அந்தவகையில் குறித்த வைத்தியசாலையில் அபிவிருத்தி உத்தியோகத்தர், சிற்றுழியர்கள், மருத்துவர் உள்ளிட்ட ஆளணித் தேவைப்பாடுகள் காணப்படுவதாக வைத்தியரால் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இவ்வாறான ஆளணிப்பற்றாக்குறைகள் காணப்படுவதால் தம்மால் வினைத்திறனான வைத்தியசேவையை வழங்கமுடியாதுள்ளதாகவும் இதன்போது வைத்தியரால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.

இதுதவிர வைத்தியசாலையின் சில அறைகளில் மின்சார இணைப்புக்கள் சீரின்றிக்காணப்படுவதால் அந்த அறைகளைப் பயன்படுத்திக்கொள்ளமுடியாத நிலை காணப்படுவதாகவும் இதன்போது வைத்தியரால் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

இந்நிலையில் வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகளைக் கேட்டறிந்ததுடன், குறைபாடுகளை நேரடியாகவும் பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியசாலைக்குறைபாடுகளை சீர்செய்வதுதொடர்பில் தம்மால் உரியவகையில் கவனஞ் செலுத்தப்படுமெனத் தெரிவித்தார்.

அதேவேளை குறித்த வைத்திய சாலைக்கு நலன்புரிச்சங்கம் ஒன்றினை உருவாக்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வைத்தியரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது வைத்தியரிடம் வலியுறுத்தினார். அதற்கமைய தாம் விரைந்து நலன்புரிச்சங்கம் ஒன்றினை உருவாக்குவதாக வைத்தியரால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த களவிஜயத்தின்போது கரைதுறைப்பற்று பிரசேசசபை உறுப்பினர்தளான மகாதேவா குணசிங்கராசா, தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ், ஞானதாஸ் ஜூட்சன் ஆகியோர் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அன்மைச் செய்தி

Leave a Comment