உலக செய்திகள் சிறப்புச் செய்தி 

ஈரான் கொத்துக் குண்டுகளை பயன் படுத்துவதாக இஸ்ரேலிய இரா ணுவம் குற்றம் சாட்டு!

ஈரான் தனது ஏவுகணைத் தாக்குதல்களில் கொத்துக்குண்டுகளை பயன்படுத்துவதாக இஸ்ரேலிய இராணுவம் (IDF) மற்றும் சர்வதேச ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன.
ஈரானின் Fateh போன்ற ஏவுகணைகள் விண்ணிலிருந்து வரும்போது, தரைக்குச் சில கிலோமீட்டர் உயரத்திலேயே வெடித்துச் சிதறுகின்றன. அதன் உள்ளே இருக்கும் சிறிய குண்டுகள் ஒரு பெரிய கால்பந்து மைதானம் போன்ற பரப்பளவில் மழையெனப் பொழிகின்றன.
இஸ்ரேலின் Iron Dome போன்ற அதிநவீன பாதுகாப்பு அமைப்புகளுக்கே இது பெரும் சவாலாக உள்ளது. ஒரு ஏவுகணையைத் தடுப்பது எளிது, ஆனால் விண்ணிலேயே பிரிந்து பல துண்டுகளாக வரும் நூற்றுக்கணக்கான சிறு குண்டுகளைத் தடுப்பது மிகக் கடினம்.
சமீபத்திய தாக்குதல்களில் மத்திய இஸ்ரேலின் பல பகுதிகளில் இத்தகைய குண்டுகள் விழுந்துள்ளதால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்
ஈழப் போரின் போதும் கொத்துக்குண்டுகள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அதனை நிருபிக்கக்கூடிய சாட்சியங்களும் உள்ளன என்கின்றனர் ஆய்வாளர்கள். எனினும் இலங்கை அரசு அதை மறுக்கிறது.
2018 மார்ச் 1 அன்று சர்வதேச ஒப்பந்தத்தில் (CCM) இணைந்து, இவற்றை இனி பயன்படுத்த மாட்டோம் என உறுதி அளித்து இலங்கை கையெழுத்திட்டுள்ளது. ஏற்கனவே இந்த உடன்படிக்கையில் 120-க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டுள்ள போதிலும், உலகின் முன்னணி இராணுவ வலிமை கொண்ட நாடுகள் (அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான் போன்றவை) இன்னும் இதில் இணையவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை. இன்றும் பல நாடுகள் இந்தத் தடையை ஏற்காமல் இருப்பது மனிதாபிமானத்திற்கு இழைக்கப்படும் அநீதி.
கொத்துக் குண்டுகள் வானில் வெடித்து பல சிறிய குண்டுகளாக பரவி பெரிய பகுதியை தாக்கும். இவ்வாறு விழும் குண்டுகளில் சில வெடிக்காது மண்ணில் புதைந்து போகும். போர் முடிந்து பல காலம் கடந்தும் வெடிக்கும் இந்தக் கொடூர ஆயுதங்கள் ஒழிக்கப்பட வேண்டும்.
இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது ஈழ இறுதிப் போரில் பயன்படுத்தப்பட்டு வெடிக்காத கொத்து குண்டுகள் என குறிப்பிடப்படும் புகைப்படமாகும்
சங்கர் சிறீ
முக நூலிலிருந்து.

அன்மைச் செய்தி

Leave a Comment