சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

கல்லுமலையும், வெடுக்குநாறியும் எங்கள் சொத்து, வவுனியாவில் போராட்டம்

கல்லுமலையும், வெடுக்குநாறியும் எங்கள் சொத்து, எனத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் போராட்டம்

 

கல்லுமலையும், வெடுக்குநாறியும் எங்கள் சொத்து, எனத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் போராட்டம் ஒன்று நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.

தையிட்டியில் ஜனநாயக ரீதியாக போராடியவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும், வவுனியா உட்பட வடக்கு, கிழக்கில் புதிதாக அமைக்கப்படும் விகாரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள்,

சட்டவிரோதமாக தையிட்டியில் அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராடியவர்கள் மிலேச்சத்தனமாக கைது செய்யப்பட்டுள்ளனர். இது தமிழ் மக்கள் மீதான ஒரு அடக்குமுறை செயற்பாடாகவே உள்ளது.

வடக்கில் குருந்தூர் மலை, வெடுக்குநாறி மலை, தையிட்டி தற்போது வவுனியா கல்லுமலை என்பன ஆக்கிரமிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே மறுக்கப்படும் எமது உரிமைகளை அடைவதற்காக நாம் தொடர்ச்சியாக போராட்டங்களை செய்வோம் என்றனர்.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் படங்களையும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரிய பதாதைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.

 

அன்மைச் செய்தி

Leave a Comment