Uncategorized 

விளக்குக் கொளுத் தும் இழுக்குப் பிறவிகளே! இரண்டகர் கள் வரிசையில் இடம் பெற்றீர்! காசி ஆனந்தன்

விளக்குக் கொளுத்தும் இழுக்குப் பிறவிகளே!
இரண்டகர்கள் வரிசையில் இடம் பெற்றீர்! இழிவுற்றீர!
காசி ஆனந்தன் அறிக்கை
உலக வரலாற்றில் முதல் தடவையாக உயிரோடு வாழும் ஓர் விடுதலை
இயக்கத் தலைவனுக்கு விளக்குக் கொளுத்தும் உணர்ச்சியற்ற இழிபிறவிகளின்
ஒன்று கூடல்.
மனம் துடிக்கிறது. சினம் வெடிக்கிறது..
“தலைவர் இல்லை” என்று சொல்கிறவர்கள் இரண்டு வகை. “ தலைவர்
இல்லை” என்று நினைப்பவர்கள் சிலர். “தலைவர் இருக்கக்கூடாது” என்று
நினைப்பவர்கள் சிலர்.
“ தலைவர் இல்லை” என்று நினைப்பவர்கள் ‘தலைவருக்கு எதற்காக
விளக்குக் கொளுத்த வேண்டும்?’ என்று தலைவர் மீதுள்ள பற்றால்-பாசத்தால்
விளக்குக் கொளுத்திகளை எதிர்க்கிறார்கள்.
“தலைவர் இருக்கக்கூடாது” என்று நினைப்பவர்கள் தலைவருக்கு விளக்குக்
கொளுத்தியே தீருவது என்று தலைக்கனத்தோடு திமிர் கொண்டு குதிக்கிறார்கள்.
“தலைவர் இருக்கக்கூடாது” என்று நினைப்பவர்கள் யார்? இயக்கத்தின்
அமைப்பு விதிகளுக்கு எதிராகத் தவறிழைத்து புலிகள் இயக்கத்திலிருந்து
வெளியேற்றப்பட்டவர்கள். சிங்கள உளவுத்துறையின் துணையோடு இலங்கையை
விட்டுவெளியேறி அவர்களின் திட்டங்களை நிறைவேற்ற வெளிநாடுகளில் தங்கிச்
சிங்கள இனவெறி அரசின் கையாட்களாக இயங்குபவர்கள். தங்களிடம்
சிக்கிக்கொண்ட கோடிக்கணக்கான புலிகளின் பணம் தலைவர் வந்தால்
பறிபோய்விடுமோ என்று வெளிநாடுகளில் அச்சத்தோடு தவிப்பவர்கள்.

“தலைவர் இருக்கிறார்”, “தலைவர் இருக்க வேண்டும்” என்று நம்பும்
இலட்சக்கணக்கான உலகத் தமிழர்கள், தலைவர் இருப்பின் உண்மையை
தெளிவாக அறிந்தவர்களாய் அவர் உலக அரங்கில் முன்னிலைப்படுத்திய
தேசத்தின் புதல்வி துவாரகா பிரபாகரன் அவர்களின் தலைமையில் தலைவரின்
திட்டங்களை நிறைவேற்றத் தொடங்கி இருப்பதை விளக்குக் கொளுத்திகளால்
தடுத்து நிறுத்த முடியவில்லை.
“தலைவர் இல்லை” என்பதற்கு இதுவரை எந்தச் சான்றுகளும் இல்லை.
தலைவர் கொல்லபட்டதை நேரில் கண்ட தமிழர்கள் எவரும் இல்லை.
“தலைவர் இருக்கிறார்” என்பதற்கான சான்றுகளைத் தமிழர்கள் பல
நிலைகளில் கண்டார்கள். தலைவரின் துணைவியார் திருமதி மதிவதனி
அவர்களின் அக்கா அருணா, தலைவரையும், மதிவதனியையும், பொட்டு
அம்மானையும் நேரில் சென்று பார்த்ததாகச் சொன்னார்.
அண்மையில் மதிவதனி அவர்களின் கூடப் பிறந்த அண்ணன் சிறீ,
மகள் துவாரகாவை நேரில் சந்தித்த போது அவளைக் கட்டித் தழுவிக் கண்ணீர்
சிந்தியதைப் பார்த்தோம். நீண்ட நெடுங்காலமாக விடுதலைப் புலிகள்|
அமைப்பில் ஓய்வறியாது இயங்கி வரும் சுவிற்சலாந்து நாட்டின் ரகுபதி தலைவர்
மேதகு பிரபாகரன் அவர்களை நேரில் சந்தித்ததை ஒரு பதிவில் வெளியிடும்
போது கண்கலங்கி நிலைகுலைந்ததையும் தமிழீழ மக்கள் கண்டார்கள்.
விளக்குக் கொளுத்திகளுக்கு மட்டும் தான் இன்னும் விழிகள்|
திறப்பதாய் இல்லை.2

இந்தியாவின் மாபெரும் விடுதலைப் போராளி நேதாஜி சுபாஷ் சந்திர
போஸ் அவர்கள் திடீரென்று காணாமல் போனபோது “நேதாஜி போய்விட்டார்”
என்று பலர் சொன்னார்கள். ஆனால் முத்துராமலிங்கத் தேவர் போன்ற பலர்
“ இல்லை! நேதாஜி உயிருடன் இருக்கிறார்” என்று இறுதி மூச்சுவரை
சொன்னார்கள். .
என்றைக்கும் “நேதாஜி இல்லை” என்று சொன்னவர்கள் கூட
அவருக்கு விளக்குக் கொளுத்தவில்லை என்பதை விளக்குக் கொளுத்திகள்
எண்ணிப் பார்க்க வேண்டும்.
விளக்குக் கொளுத்திகளே! உங்கள் இழி செயலை ஆதரிப்பவர்கள்|
யார் என்று விளக்குங்கள்.
நீங்கள் விளக்குக் கொளுத்துவதை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
ஆதரிக்கவில்லை. தலைவர் நெடுமாறன் தலைமையில் இயங்கும் உலகத் தமிழர்
பேரவை ஆதரிக்கவில்லை. தமிழீழத்தில் உள்ள புனர்வாழ்வு பெற்ற புலிகள்|
அமைப்பு ஆதரிக்கவில்லை. தமிழீழ நட்புறவு மையம் ஆதரிக்கவில்லை. பிரான்ஸில்
கஜன் தலைமையில் இயங்கும் மனித உரிமைச் சங்கம் ஆதரிக்கவில்லை.
சுவிற்சலாந்திலும், பிரான்ஸிலும், உலகின் பிற நாடுகளிலும் இயங்கும் உலகத்
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஆதரிக்கவில்லை. உங்களை ஆதரிப்பவர்கள்|
உங்களைத்தவிர யாரென்று கூறுங்கள்.
நான் சொல்லட்டுமா?

சிங்கள நாள் செய்தி இதழ்களும்- இலங்கையில் சிங்களர் நடத்தும்
ஆங்கில நாள் செய்தி இதழ்களும் அண்மையில் “பிரபாகரன் சாவைப் புலிகள் ஒப்புக்
கொண்டார்கள்” என்று உங்கள் விளக்குக் கொளுத்தும் நிகழ்ச்சியைச் செய்தியாய் |
வெளியிட்டு சிரித்து எக்களித்துத் துள்ளிக் குதிக்கிறார்களே- இவர்கள் தான் உங்கள்
ஆதரவாளர்கள்.
தமிழீழ மக்கள் நீங்கள் தங்கள் தாயகத்துக்குச் செய்வது பச்சைத்
துரோகம் என்று தம்மை இழந்து நெருப்பாய்க் கொதிக்கிறார்கள்.
“எட்டப்பன்கள்” என்னும் சொல், “ துரோகிகள்” என்றே எண்ணப்படும்.
“காக்கைவன்னியர்கள்” என்னும் சொல் ” துரோகிகள்” என்றே கருதப்படும். இதே
போன்று தமிழீழத்தின் எதிர்கால வரலாற்றில் “விளக்குக் கொளுத்திகள்” என்னும்
சொல் “ துரோகிகள்” என்றே பொருள் கொள்ளப்படும்.

 

 

 

Leave a Comment