செய்திகள் தாயகச் செய்தி 

யாழ் செம்பியன்பற்று பகுதியில் மணல் கடத்தல்

யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல் சம்பவம் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அப்பகுதி வாழ் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

செம்பியன் பற்று பகுதியில் மக்கள் குடியிருப்புகள் நடுவிலேயே இவ்வாறு மணல் கொள்ளை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது கிராமப் பகுதியில் அதிகமாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடங்களுக்காக, அனுமதி கொடுக்கப்படாத நிலையில், சட்டவிரோத மணல் அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது. இவ்வாறு மணல் கொள்ளை தொடர்ந்தால், இக் கிராமப் பகுதியில் பாரிய நீர்த்தேக்கம் ஏற்பட்டு மழைக்காலத்தில் உயிர் சேதங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

ஒளிப்படம் சமூக வலைத்தளம்

 

Leave a Comment