இலங்கை செய்திகள் 

பள்ளத்தில் வீழ்ந்த இ.போ.ச. பேருந்து; 11 பேர் உயிரிழப்பு

கொத்மலை, கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொத்மலை, கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (11) அதிகாலை கொத்மலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெரண்டிஎல்ல பிரதேசத்தில் கதிர்காமத்திலிருநது குருணாகல் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) பேருந்து ஒன்று, வீதியை விட்டு விபத்துக்குள்ளாகி பள்ளத்தில் வீழ்ந்து புரண்டதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் பேருந்து சாரதி உள்ளிட்ட 30 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்து கொத்மலை மற்றும் நுவரெலியா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் ஆரம்பத்தில் 5 ஆண்களும் 3 பெண்களும் மரணமடைந்த நிலையில், வைத்தியசாலையில் மேலும் 3 பேர் மரணமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்தனர்.

பேருந்து கவிழ்ந்ததில் அதற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி இடம்பெற்றுள்ளதாக காவல்துறை மேலும் தெரிவித்தனர்.

விபத்தில் இறந்தவர்களின் அடையாளங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் கொத்மலை காவல்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்தனர்.

Leave a Comment