தாயகச் செய்தி 

வற்றாப்பளை ஆலய உற்சவத்திற்கு சென்ற இளைஞரொருவர் விபத்தில் பலி

முல்லைத்தீவு வற்றாப்பளை  ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திற்கு சென்று திரும்பிய இளைஞரொருவர் விபத்தில் பலியாகியுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை வேளையில் இடம்பெற்றிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை (10) அதிகாலை இடம் பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், நித்திரை கலக்கம் காரணமாக இவ் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.பலியான இளைஞன் தொடர்பான மேலதிக விபரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Comment