பிரபல சிங்கள நடிகை மாலினி பொன்சேகா காலமானார்
இலங்கை சினிமாவின் ராணி என்று அழைக்கப்படும் மாலினி பொன்சேகா இன்று (24) அதிகாலை காலமானார். சிறிது காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர் உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். மரணிக்கும்போது அவருக்கு 76 வயதாகும். 1947 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி களனியில் பிறந்த அவரது இயற் பெயர் வன்னி ஆராச்சிகே மாலினி செனஹெலதா பொன்சேகா எனும் பெயரில் பிறந்த இவர், பின்னர் இலங்கை சினிமாவில் மாலினி பொன்சேகா எனும் பெயரில் பிரபலமானார். 1963 ஆம் ஆண்டு மேடை நாடகங்களில் அறிமுகமான திருமதி மாலினி பொன்சேகா, 1968 ஆம் ஆண்டு புஞ்சி பபா எனும் சிங்கள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். 1963 ஆம் ஆண்டு “நோரத ரத” நாடகத்துடன்…
மேலும் படிக்க