புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு நேற்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்தன. இந்த மாணவிக்கு நிகழ்ந்த கொடூரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொதுவாக பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நேற்று (13) வேலணை சந்தியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டது. இப் போராட்டத்தினை சமூக மட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து முன்னெடுத்தன. இதில் சமூக மட்ட அமைப்பினர், கல்விமான்கள், கட்சி சார்ந்தவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பறையொலி எழுப்பி, “பாலியல் வன்புணர்வுக்கு எதிராக ஒன்றிணைவோம், பாலியல் வன்புணர்வுக்கு எதிரான நீதிக்கு சட்டவாக்கத் துறையே கவனம் செலுத்து, பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மௌனத்தை கலைப்போம், பாலியல் வன்கொடுமைக்கு நீதி வேண்டும், பெண்களை இழிவுபடுத்தாத ஊடகங்கள் வேண்டும், ஊடகங்களே பாலியல் வன்கொடுமைகளை பாதுகாக்காதே, பாலியல் சுரண்டல்களின் கதவுகளை மூடுவோம், உரிமையின் எல்லைகளை…
மேலும் படிக்க